இந்திய எழுத்தாளர் நிதின் ஏ கொகலே பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

நவம்பர் 05, 2024

இந்திய எழுத்தாளர் நிதின் ஏ கொகலே இன்று (நவம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் திரு.கோகலே ஆகியோர் சுமுகமாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா மற்றும்  இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.