பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 06, 2024

இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அண்டலிப் எலியாஸ், கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவ. 06) சந்தித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் பங்களாதேஷ் தூதுவரை அன்புடன் வரவேற்று சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் மொனிருஸ் ஸமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.