--> -->

தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு
செயலாளரினால் விஷேட சொற்பொழிவு

நவம்பர் 07, 2024

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு (NDC) இன்று (நவம்பர் 07) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது மேற்படி கல்லூரி மாணவர் அதிகாரிகள் மத்தியில் விரிவுரையாற்றிய அவர் தனது அனுபவம் மற்றும் அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

இன்று காலை கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை மேற்படி கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வரவேற்றார்.

தேசிய பாதுகாப்பு கல்லுரியின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விரிவுரை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘இலங்கையின் சமகால தேசிய பாதுகாப்பு சவால்களை நிவர்த்தி செய்வதில் இராணுவத்தின் பங்கு' என்ற தலைப்பில் பாதுகாப்பு செயலாளர் இந்த விரிவுரையை நிகழ்த்தினார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி 2021இல் இலங்கையின் முதன்மையான மூலோபாய கல்வி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டது. இது கூட்டு அறிவுசார் திறன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு பொறிமுறையினை வலுப்படுத்துவதற்காக ஆட்சி முறை, இராஜதந்திரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய துறைகளில் எதிர்கால கொள்கை வகுப்பாளர்களை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்ந விரிவுரையின் முடிவில் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளைத் தளபதியும் நினைவுப் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தாவும் கலந்து கொண்டார்.