இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

நவம்பர் 08, 2024

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் (SLCG) பணிப்பாளர் நாயகம் (DG) ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் வியாழக்கிழமை (நவம்பர் 07) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ரியர் அட்மிரல் சேரசிங்கவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வை குறிக்கும் வகையில் இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.