மட்டக்களப்பு பாடசாலையில் இலங்கை இராணுவத்தினரால் RO
நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது

நவம்பர் 08, 2024

இலங்கை இராணுவத்தின் 12வது இலங்கை தேசிய பாதுகாப்புப் (SLNG) படையினர், மட்டக்களப்பு குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில், RO நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை  நிறுவியுள்ளதாக இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன்,   தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இலங்கை இராணுவத்தினர் தமது சமூக சேவை செயல்திட்டத்தின்  ஓர் அங்கமாக இந் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.