இந்திய நீர்மூழ்கிக கப்பல் ‘INS வேலா’ கொழும்பு வருகை

நவம்பர் 11, 2024

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான INS வேலா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர் என்று கடற்படை ஊடகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

67.5 மீட்டர் நீளமுள்ள INS வேலா நீர்மூழ்கிக் கப்பல் 53 பணியாளர்கள் கொண்ட குழுவினால் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.