கண்டியில் உள்ள புனித தந்தத்திற்கு பாதுகாப்பு செயலாளர் மரியாதை செலுத்தினார்

டிசம்பர் 29, 2020

கண்டிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அங்கு வைக்கப்பட்டுள்ள புனித தந்தத்திற்கு இன்று (டிச 29 ) மரியாதை செலுத்தினார்.

தியவதன நிலமே நிலங்க தேல பண்டார பாதுகாப்பு செயலாளரை வரவேற்றதுடன் புனித தந்தம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு, வழிபாடு மற்றும் சமய அனுஷ்டானங்களுக்காக அழைத்து சென்றார்.

ஜெனரல் கமல் குணரத்ன தனது விஜயத்தின் ஓர்  அங்கமாக அஸ்கிரிய பீடத்தின் பிரதம தேரர் அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், மல்வத்து பீடத்தின் துணை தேரர் அதி வண. நியங்கொட விஜிதசிறி தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் துணை தேரர் கெடிகே ரஜமஹா விஹாரயின் துணை தேரர் அதி வண. வெண்டுருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரத்தனபால உபாலி தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

பாதுகாப்புச் செயலாளர் நேற்றைய தினம் (டிச 28) ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டதை அடுத்து  பெளத்த மதத் தலைவர்களிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.