COSATT இயக்குனர் பாதுகாப்பு செயலரை சந்தித்தார்

நவம்பர் 13, 2024

தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பின் (COSATT) பணிப்பாளர் கலாநிதி நிஸ்சல் என். பாண்டே, இன்று (நவ. 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் கலாநிதி பாண்டேவை அன்புடன் வரவேற்று அவருடன் சுமுகமாக கலந்துரையாடினார். அண்மையில் வெளியிடப்பட்ட  Labour Migrants from South Asia: Issues and Concerns எனும் புத்தகத்தின் பிரதியை கலாநிதி பாண்டே பாதுகாப்புச் செயலரிடம் கையளித்தார்.

இச்சந்தின் போது நிகழ்ந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்துடன் (INSS) தனது ஒத்துழைப்பை தொடர  கலாநிதி பாண்டே மேலும் உறுதிப்படுத்தினார்.

INSS ன் வேலைபார்க்கும் பணிப்பாளர் நாயகம் மற்றும் செயல் இயக்குநர் (ஆராய்ச்சி) இந்நிகழ்வில் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.