--> -->

இலங்கை விமானப்படை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 13, 2024

இலங்கை விமானப்படையின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (AFESA) செயற்குழு பிரதிநிதிகள் இன்று (நவம்பர் 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சந்தித்தனர்.

AFESA சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எல்மோ பெரேரா (ஓய்வு) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவில் எயார் கொமடோர் அமல் விமலரத்ன (ஓய்வு), பிலைட் லெப்டினன்ட் சுசத் ராஜபக்ஷ (ஓய்வு) மற்றும் முன்னாள் வாரண்ட் அதிகாரி டி.எம். சரத் குமார ஆகியோர் அடங்குவர்.

பாதுகாப்புச் செயலாளர் தூதுக்குழுவினருடன் மேட்கொண்ட சுமுகமாக கலந்துரையாடளின் போது முன்னாள் விமானப்படை வீரர்களின் நலன்புரி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.