‘JMSDF SAMIDARE’ கொழும்பு கொழும்பு வருகை

நவம்பர் 18, 2024

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் ‘JMSDF SAMIDARE’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

151 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் 199 பணியாளர்களைக் கொண்ட கடற்படை குழுவினால் இயக்கப்படுகிறது.

விஜயத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) இலங்கையை விட்டு வெளியேற முன் கப்பலின் பணியாளர்கள் சில உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.