பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல்
சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மீண்டும் நியமனம்
நவம்பர் 19, 2024
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று (நவம்பர் 19) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சுகளுக்கான செயலாளர்களுக்கான நியமனம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பாதுகாப்பு செயலாளருக்கான நியமன கடிதத்தையும் வழங்கினார்.
இதேவேளை, எயார் வைஸ் மார்ஷல் தூயகொந்தா (ஓய்வு) முதலில் பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதியால் 2024 செப்டம்பர் 23ஆம் திகதி முதற்தடவையாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.