--> -->

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான
தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 20, 2024

இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான சர்வதேச குடியேற்ற அமைப்பின் (IOM) தூதுவர் கிறிஸ்டின் பி பார்கோ (Ms. Kristin B. Parco) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இன்று (நவம்பர் 20) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளரும் IOM தூதுவரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

இச்சந்தின் போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரும் கலந்துக் கொண்டார்.