கடற்படை CBRN பிரிவு கொழும்பு துறைமுகத்தில் கூட்டுப்
பயிற்சியை நடத்தியது

நவம்பர் 21, 2024

இலங்கை கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவு கடந்த செவ்வாயன்று (நவம்பர் 19) கொழும்பு துறைமுகத்தில் கூட்டு பயிற்சியை ஒன்றை நடத்தியது. மொன்டானா நேஷனல் கார்ட், அமெரிக்க கடலோர காவல்படை (மாவட்டம் 13) மற்றும் இலங்கையை விமானப்படை உடன் கூட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் Subject Matter Expert Exchange (SMEE) பரிமாற்ற நிகழ்ச்சியின்  பங்கேற்பாளர்களின் அறிவு மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு இக்கூட்டு பயிட்சி நடத்தப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சி கடற்படை CBRN குழு மற்றும் துறைமுக தீயணைப்பு சேவையும் இணைந்து நடத்தியது. CBRN சம்பவங்களை விரைவாகவும் திறம்படவும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட உயர் பயிற்சி பெற்ற முதல் பதிலளிப்பவர்களை உள்ளடக்கிய சிறப்பு CBRN குழுக்களை கடற்படை மூலோபாய ரீதியாக நிறுவியுள்ளது. இக்குழுக்கள் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை (KKS) உட்பட அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் இயங்குகின்றன.