பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு)
கடமை ஏற்றார்

நவம்பர் 25, 2024

பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அமைந்துள்ள தனது புதிய அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த வைபவத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலந்து சிறப்பித்தார்.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் ஜெயசேகர (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சராக ஜனாதிபதி அவர்களால் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 21) நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.