53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர்
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
நவம்பர் 26, 2024
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர் 25) இடம்பெற்ற 53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதி மேதகு அண்டலிப் எலியாஸ், பாதுகாப்புச் செயலாளரை வரவேற்றார். பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம். மொனிருஸ்ஸாமான் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் உரையாற்றும் போது பாதுகாப்பு செயலாளர், பங்களாதேஷ் மக்கள் குடியரசின் ஆயுதப்படைகள் தமது தேசத்சத்தின் விடுதலைக்காக மேட்கொண்ட போராட்டத்தின் 53 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நிகழ்த்தப்படும் இந்நிகழ்வுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
“பங்களாதேஷ் மற்றும் இலங்கை வரலாற்று ரீதியாக மிக சுமூகமான உறவைப் பேணி வருகின்றன. அந்நாட்டுடன் நமது உறவு, பல துறைகளில் பரிணமித்து, தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமான மூலோபாய நிலையை அடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்நிகழ்வை கருதலாம்” என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரால் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உட்பட பல சிறப்பு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.