வருடாந்த இரத்ததான முகாமில் அமைச்சு ஊழியர்கள் இரத்ததானம் செய்தனர்

நவம்பர் 29, 2024

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வருடாந்த ரத்ததான முகாம் இன்று (ஒக்.19) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற இந்த  ரத்ததான முகாமில் அதிகளவான அமைச்சு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி ரத்ததானம் பற்றிய  விழிப்புணர்வு விரிவுரையொன்று மருத்துவ ஆலோசகர் ஒருவரினால்` நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் (UHKDU)  மருத்துவ பணியாளர்கள் குழுவின் உதவியுடன் இந்த இரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.