பாதுகாப்பு செயலாளர் வர்த்தக சேவை ​​நீச்சல் சாம்பியன்ஷிப் 2024 யில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்

டிசம்பர் 02, 2024

15வது முறையாக நடத்தப்படும் வர்த்தக சேவை  ​​நீச்சல் சாம்பியன்ஷிப் 2024,  ஜனாதிபதி சவால் கோப்பைக்கான போட்டி டிசம்பர் 1ஆம் திகதி  தர்ஸ்டன் கல்லூரி நீச்சல் தடாகத்தில்  நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

இந்த போட்டி பல தனியார் துறை நிறுவனங்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது.  

போட்டிகளில் முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.