பலாலி விமானப் படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 63 பொதுமக்கள் வெளியேறினர்.

டிசம்பர் 30, 2020

துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 63 பேரே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை உரிய முறையில் நிறைவு செய்து கொண்டு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து (டிசம்பர் 28) வெளியேறியதாக இலங்கை விமானப் படை தெரிவித்தது.

மேலும் 14 நாட்களுக்கு தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை மேலும் தெரிவித்தது.