--> -->

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

டிசம்பர் 09, 2024

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இன்று (டிசம்பர் 09) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

அமைச்சுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரை வரவேற்ற, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலை நடத்தினார்.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளருக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் நினைவுச் சின்னம் வழங்கினார்.
 
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்டாவும் கலந்து கொண்டார்.