ஊனமுற்ற போர்வீரர்களின் நலன் குறித்து
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்

டிசம்பர் 11, 2024

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 11) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் மேலதிக செயலாளர் - பாதுகாப்பு, ரணவிரு சேவா அதிகார சபையின் (RSA) தலைவர் உட்பட பல சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான உறுதியான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பிரத்தியேக சபையொன்றை நியமிக்குமாறு பிரதியமைச்சர் பணிப்புரை வழங்கினார். புதிதாக அமைக்கப்டும் இந்த சபைக்கு மேலதிக செயலாளர் - பாதுகாப்பு தலைவராக நியமிக்கப்பட்டதுடன், RSA இன் தலைவர், தொடர்புடைய முப்படைகளின் நலன்புரி இயக்குனர்கள் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளும் அங்கத்தவர்களாக அடங்குவர்.

ஊனமுற்ற போர்வீரர்கள்  சரியாக வகைப்படுத்தப்பட்டுவதன் முக்கியத்துவம் கலந்துரையாடளின் போது வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு வகைப்படுத்தப்படுபவர்களின்  பிரச்சினைகளுக்கு  உடனடி தீர்வுகளை காண்பதற்கு இச்சபை பணிக்கப்பட்டது.

ஊனமுற்ற படைவீரர்களின் நலன்களை உறுதி செய்வதற்கும் அவர்களின் தேவைகளை கட்டமைக்கப்பட்ட மற்றும் கூட்டு அணுகுமுறையின் மூலம் திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.