ஆஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் விமானம் அறிமுக விழாவில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்
டிசம்பர் 12, 2024பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ரத்மலானை விமானப்படை தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானத்தின் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதி மேதகு போல் ஸ்டீபன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் கூட்டு முகமை பணிக்குழு (JATF) ஆபரேஷன் இறையாண்மை எல்லைகள் (OSB) பிரதானி, ரியர் அட்மிரல் பிரட் சொன்டர் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர். இந்த விமானம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு (SLAF) அண்மையில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
இதன்போது புதிய விமானத்திற்கு நீர் மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பாதுகாப்பு செயலாளர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் ரியர் அட்மிரல் சொன்டர் ஆகியோர், விமானப்படை தளபதியுடன் பீச்கிராஃப்ட் விமானத்தை ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நன்கொடை இரு நாடுகளுக்கிடையிலான ஆழமான மற்றும் நீடித்த நட்பை அடையாளப்படுத்தும் அதே வேளையில், விமானப்படையின் திறன்களை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன புரோ லைன் II ஏவியோனிக்ஸ் பேக்கேஜ் மற்றும் FLIR Star Safire HD எலக்ட்ரோ-ஆப்டிகல்/இன்ஃப்ராரெட் (EO/IR) அமைப்பு ஆகியவை நமது கடல்சார் கண்காணிப்பு திறன்களை பெரிதும் மேம்படுத்தும். அத்துடன் இந்த விமானம் எங்கள் பரந்த கடல் பிரதேசத்தை திறம்பட ரோந்து செய்ய மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்" என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவின் அடித்தளமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக இந்த விமானம் வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உட்பட அனைத்து வகையான நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்ள, அத்துடன் புலனாய்வு தகவல் மூலம் எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்துதல், எல்லைப் பாதுகாப்பின் கீழ் கடல்சார் மக்களை கடத்தும் முயற்சிகளைத் தடுப்பது போன்றவை, ஆபரேஷன் இறையாண்மை எல்லைகளின் கீழ் நடைபெறுரும்.
விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு முன்னர் இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதி மேதகு போல் ஸ்டீபன்ஸ் கமாண்டர் JATF-OSB ரியர் அட்மிரல் சொன்டர் மற்றும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் அமண்டா ஜோன்ஸ்டன் உடன் பாதுகாப்பு செயலாளர் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேட்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.