பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி பட்டமளிப்பு விழா நெலும் பொகுண திரையரங்கில் நடைபெற்றது
டிசம்பர் 13, 2024நேற்று மாலை (டிசம்பர் 12) நெலும் பொகுண திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) பாடநெறி இலக்கம் 18 இன் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஆயுதப்படை தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். DSCSC இன் கட்டளை தளபதி, மேஜர் ஜெனரல் கபில டோலகே, சிறப்பு அதிதிகளை வரவேற்றார்.
பாடநெறி எண். 18 இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு டிசம்பரில் முடிவடைந்தது. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 78 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 21 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 26 அதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல், அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 வெளிநாட்டு பட்டதாரிகளும் என மொத்தம் 150 அதிகாரிகள் விழாவில் பட்டம் பெற்றனர்.
பாடநெறியில் சிறந்து விளங்கிய பட்டதாரிகளுக்கு பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் ஜெயசேகர (ஓய்வு) வினால் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) முப்படைகளின் மத்திய தர அதிகாரிகளுக்கான இராணுவக் கல்வி வழங்கும் பிரதான கல்லூரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
DSCSC நிர்வாக சபை உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், கல்லூரியின் முன்னாள் கட்டளை தளபதிகள், கல்விக்குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், மற்றும் பட்டம் பெறும் அதிகாரிகளின் குடும்பத்தினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.