பதில் பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்
டிசம்பர் 15, 2024ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.
இதற்கமைய இன்று (டிசம்பர் 15) முதல் அமுலுக்கு வரும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.