இராணுவத் தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பு

டிசம்பர் 09, 2024

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபிஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 9 டிசம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

சுமூகமான சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கை இராணுவத்தின் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தும் பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினர்.

இரு தரப்பினரும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினர்.

அமைதியை மேம்படுத்துவதிலும், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் இரு நிறுவனங்களுக்கும் பகிரப்பட்ட கடமைகள் குறித்த கலந்துரையாடலுடன் இச்சந்திப்பு நிறைவுபெற்றது.

நன்றி - www.army.lk