பொதுமக்கள் தினத்தில் ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர் குடும்பங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்துகிறது
டிசம்பர் 17, 2024தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க கவனம் செலுத்தப்படுகின்றது.
அதன் ஒரு அங்கமாக பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தின நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 17) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொண்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை பாதுகாப்பு செயலாளர் இன்றைய தினத்தின் போது செயல்படுத்தினார். அத்துடன் அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு இணங்க, போர் நடவடிக்கைகளின் போது ஊனமுற்ற போர்வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் நலனை பாதுகாக்கும் நோக்குடன் நிர்வாகப் பணிகளை திறம்பட நிறைவேற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்புச் செயலாளர் அமைச்சின் பணியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க கொள்கைகள் மற்றும் அரச விதிகளுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சு ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த திட்டங்கள் செயல்படுத்துகிறன. இந்த முயற்சிகள் அவர்களின் மன உறுதியை உயர்த்துவதையும், அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு தேசத்தின் நன்றியை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது விஷேட அம்சமாகும்.