KDU உபவேந்தர் பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

டிசம்பர் 19, 2024

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) உபவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (டிசம்பர் 19) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதி அமைச்சர் உபவேந்தருடன் சுமுகமான  கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.