2024 ஆம் ஆண்டின் மூளை ஆரோக்கிய வாரத்தின்
‘ஆதரவு தினம்’ KDU இல் நடைபெற்றது

டிசம்பர் 19, 2024

மூளை சுகாதார வாரம் 2024 இன் ‘ஆதரவு தினம்’ இன்று (டிசம்பர் 19) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கௌரவ Dr. நளிந்த ஜயதிஸ்ஸ, MP இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். KDU துணைவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார நிகழ்விற்கு வருகை தந்த கௌரவ விருந்தினர்களை வரவேற்றார்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16 முதல் 20 வரை மூளை ஆரோக்கியத்திற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக KDU, Global Patient Advocacy Coalition (GPAC) மற்றும் முன்னணி சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.
 
'மூளை ஆரோக்கிய வாரம் 2024', மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் நோய்களின் தாக்கத்தை குறைப்பதில் தடுப்பு மற்றும் செயல்திறன் மிக்க பராமரிப்பு ஆகியவற்றின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன உட்பட சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.