வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

மே 03, 2019

பொது மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் தராதரமின்றி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மலை (மே, 02) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தப்படுத்துவதற்காக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவசரகால நிலைமையின் கீழ் முப்படையினருக்கும் எந்தவொரு இடத்தையும் சோதனையிடவும், சந்தேக நபர்களை கைது செய்யவும், பொருட்களை கைப்பற்றவும் முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.