2004 சுனாமியின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று

டிசம்பர் 26, 2024

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (டிசம்பர் 26) நடைபெற்ற ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நினைவு விழாவின் போது, ​​35,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வும் நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) உட்பட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுனாமி அனர்த்த நினைவு நிகழ்ச்சிகள் பெரலிய சுனாமி நினைவிடம் உட்பட, நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டன. 2004 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை மௌன அஞ்சலியம் செலுத்தப்பட்டது.

இந்த விழா உயிர் இழந்தவர்களின் நினைவாக மட்டுமல்லாமல், அனர்த்த தயார்நிலையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.