இலங்கை கடற்படையின் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்
டிசம்பர் 30, 2024வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, RSP, USP, ndc, psc, MMaritimePol, MBA in HRM, PG Dip in HRM, BMS, Dip in Mgt, AFIN இலங்கை கடற்படையின் (SLN) 26வது தளபதியாக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பரி. தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான வைஸ் அட்மிரல் பானகொட 1989 ஆம் ஆண்டு கடற்படை 19வது உள்வாங்கலின் கீழ் நிறைவேற்று பிரிவுவின் கெடெட் அதிகாரியாக இணைந்தார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலை (NMA) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் டார்ட்மவுத், பிரித்தானியா ரோயல் கடற்படைக் கல்லூரி, ஆகியவற்றில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்தது 1991 இல் துணை லெப்டினன்டாக சேவையில் இணைந்தார்.
வைஸ் அட்மிரல் பானகொட 1993 இல் NMA இல் சப் லெப்டினன்ட் தொழில்நுட்பப் கல்விநெறியை முடித்ததுடன் 2000 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படைக் கப்பல் வெந்துருத்தியில் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நிபுணத்துவ பயிற்சியை நிறைவுசெய்தார். 2015ல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் வணிக நிர்வாகம், மற்றும் 2019 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் வொல்லொங்கொங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கையில் முதுகலைப் பட்டங்களை பெற்றார், மேலும் 2021 இல் கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் தேசிய பாதுகாப்புப் பாடநெறியில் கலந்துகொண்டு தனது மூலோபாய நிபுணத்துவத்தை மேம்படுத்தினார்.
வைஸ் அட்மிரல் பானகொட ரண சூர பதக்கம (RSP), மற்றும் உத்தம சேவா பதக்கம (USP) விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஸ் அட்மிரல் பானகொட இலங்கை கடற்படையில் பணிப்பாளர்- கடற்படை பயிற்சி, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, வட மத்திய கடற்படைப் கட்டளைத் தளபதி, வடக்கு கடற்படைத் கட்டளைத் தளபதி மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி உட்பட பல நியமனங்களில் கடமையாற்றியுள்ளார். அவர் பல்வேறு விரைவுத் தாக்குதல் படகுகள், கப்பல்கள் மற்றும் கடற்படை நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக சேவையாற்றினார்.
வைஸ் அட்மிரல் பானகொட மற்றும் திருமதி அனுஷா பானகொட தம்பதியினருக்கு அமாவி மற்றும் ஹிமேத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.