புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

டிசம்பர் 31, 2024

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (டிசம்பர் 31) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

வைஸ் அட்மிரல் பானகொட கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளரை உத்தியோகபூர்வ மாக இன்று சந்தித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் வைஸ் அட்மிரல் பானகொடவின் நியமனம் குறித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கடற்படையை தொடர்ந்து சிறந்து விளங்கச் செய்வதில் அவரது தலைமையின் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

வைஸ் அட்மிரல் பானகொட நேற்று (டிசம்பர் 30) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.