தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து
பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்

டிசம்பர் 31, 2024

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (CRD) மற்றும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, தேசிய பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். புதிய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க இந்த தேசிய முயற்சிக்கு தங்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் கொண்டு பங்களிக்குமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் முறையான மறுசீரமைப்பு தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் இன்று (டிசம்பர் 31) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் CRD மற்றும் INSS அதிகாரிகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CRD இன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் BI அஸ்ஸலாரச்சி, INSS இன் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கேர்னல் நளின் ஹேரத் மற்றும் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.