தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கூட்டம்
டிசம்பர் 31, 2024பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 31) இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் (SLNHO) தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், நீர்வரைவியல் சபையின் தலைவர் (NHC), இலங்கை கடற்படையின் பிரதான நீர்வியலாளர் மற்றும் SLNHO இன் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
தேசிய நீர்வரைவியல் சபையின் தலைவர் தேசிய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார நன்மைகள், நீர்வரைவியல் வரைபடங்கள் உற்பத்தி ஆகியவற்றில் SLNHO இன் முன்னேற்றம் குறித்தும் மற்றும் ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகத்துடனான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் தொடர்பில் விரிவான விரிவுரையொன்றை நிகழ்த்தினார். மேலும் SLNHO இன் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் உபகரணப் பற்றாக்குறை போன்றவற்றினால் முகங்கொடுக்கும் சவால்களை அவர் எடுத்துரைத்ததோடு, SLNHO இன் திறன்களை மேலும் மேம்படுத்த சர்வதேச ஆதரவையும் கோரினார்.
2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க நீர்வரைவியல் சட்டத்தின் கீழ் SLNHO க்கு ஆதரவளிப்பதற்கும், நீர்வரைவியல் முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் மற்றும் தேசிய நோக்கங்களை பூர்த்தி செய்ய அதனுடன், தொடர்புடைய நடவடிக்கைகளின் ஒழுங்குமுறையை உறுதி செய்வதற்கும் அமைச்சின் உறுதிப்பாட்டை பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.