புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஜனவரி 02, 2025

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். வைஸ் அட்மிரல் பானகொட கடற்படையின் 26வது தளபதியாக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

கடற்படைத் தளபதியின் புதிய நியமனம் தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது தலைமையின் கீழ் கடற்படைக்கான சில முக்கிய பொறுப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த முன்னுரிமைகள் நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறளில் உயர்ந்த தரத்தை கடைபிடிக்கும் அதே வேளை சிறப்பான செயல்பாட்டு திறனைக் கொண்டு நடத்துவதில் கவனம் செலுத்துகிறது.

கடல்சார் பாதுகாப்பில் இலங்கை கடற்படையின் முக்கிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் வலுவான ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் நல்லாட்சி, நிதி பொறுப்புகூறல் மற்றும் கடற்படையில் சேவையாற்றிய மற்றும் தற்போழுது சேவையாற்றும் பணியாளர்களின் நலன்புரி தொடர்பிலும் இங்கு வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.