NACWC இன் பணிப்பாளராக எயார் வைஸ் மார்ஷல் ஷெஹான் விஜயநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனவரி 03, 2025

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை  நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் (NACWC) புதிய பணிப்பாளராக எயார் வைஸ் மார்ஷல் ஷெஹான் விஜயநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய எயார் வைஸ் மார்ஷல் விஜயநாயக்க தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடமிருந்து (ஓய்வு) பெற்றுக் கொண்டார்.

எயார் வைஸ் மார்ஷல் விஜயநாயக்க நேற்று (ஜனவரி 2) பாதுகாப்பு அமைச்சில் உள்ள NACWC அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இந்நிகழ்வில், மேலதிக செயலாளர்- பாதுகாப்பு சேவைகள்  திரு. ஜயந்த எதிரிசிங்க மற்றும்  NACWC ஊழியர்களும் கலந்துக் கொண்டனர்.