தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
ஜனவரி 03, 2025தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக (CNI) நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜனவரி 3) கொழும்பிலுள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார்.
மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 1) தனது புதிய நியமனத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.