ஊர்காவற்துறையில் காலம்சென்ற முன்னாள் Royal Ceylon Navy
வீரருக்கு இலங்கை கடற்படையிர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

ஜனவரி 06, 2025

இலங்கை கடற்படை (SLN) வியாழக்கிழமை (ஜனவரி 2) ஊர்காவற்துறையில்  காலம்சென்ற முன்னாள் Royal Ceylon Navy இடைநிலை அதிகாரி  அருளானந்தம் மரியம்பிள்ளையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.   டிசம்பர் 31 ஆம் திகதி (2024) காலம் சென்ற அன்னாரின் இறுதிக்கு கிரிகைகள் கடந்த வியாழக்கிழமை (ஜன 02) ஊர்காவற்துறையில்  நடைபெற்ற போதே கடற்படையினர் கடற்படை மரபுக்களுக்கமைய இறுதி அஞ்சலி செலுத்தினர் என கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இடைநிலை அதிகாரி மரியம்பிள்ளை 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி இலங்கை Royal Ceylon Navy தனது பணியை ஆரம்பித்து 1976 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி ஓய்வு பெறும் வரை 22 வருடங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

இறுதிச் கிரிகைகள் தொடர்பான விடயங்கள் வடக்கு கடற்படைக் கட்டளையின்  பங்கெடுப்புடன் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.