தேசிய அபிவிருத்திக்கு ஒழுக்கமுடன் கூடிய அணுமுறையின்
அவசியம் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை
ஜனவரி 10, 2025
- சட்ட ஆட்சியைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 09) ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு (KDU) விஜயம் செய்தார். பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை, KDU துணைவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அன்புடன் வரவேற்றார்.
போர் வீரர்களின் நினைவிதத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதி அமைச்சர் அதன்பின் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ந்த கலந்துறையாடலுக்கு பங்குபற்றினர். இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகல், அமுல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிரதி அமைச்சர் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள், இராணுவ அதிகாரிகள், உட்பட பட்டதாரி மாணவர்களிடையே உரையாற்றினார். அதன்போது தற்போதைய அரசாங்கம் கல்வித்துறைக்கு முன்னுரியளித்துள்ளதுடன் சகலருக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டிலிருந்து அறிவாற்றல் வெளியேற்றத்தை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இளைய தலைமுறையினருக்கு சிறந்த அறிவு மற்றும் திறன் சார்ந்த கல்வியை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதி அமைச்சர் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பேனுவதன் அவசியம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார். ஆட்சி உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்துடன் கூடிய அணுகுமுறை அவசியம் என தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதன் அவசியத்தையும் சமூகத்தில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்பு கூறலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து வெளிவர இந்த அணுகுமுறை நமக்கு முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டதாரி மாணவர்களை விழித்து பிரதி அமைச்சர், KDU வில் சிறந்த கல்வியைப் பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தனது விஜயத்தை நிறைவு செய்ய முன்னர் பிரதி அமைச்சர் பல்கலைக்கழகத்தின் அதிதிகள் புத்தகத்தில் குறிப்புகளை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.