பதில் பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனவரி 14, 2025

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று மாலை (ஜனவரி 13) சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதற்கமைய, இன்று (ஜனவரி 14) முதல் ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாடு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆகிய அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.