இலங்கைக்கான ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்
பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

ஜனவரி 16, 2025

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்சேயை சந்தித்தார். கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஐ நா சபைக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளை ஆராய்வதற்கும், பகிரப்பட்ட ஆர்வங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த சந்திப்பு தளம் அமைத்தது. இக்கலந்துரையாடலின் போது, ஐ நா அமைதிகாக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அரசியல் உரையாடலின் முக்கியத்துவம் மற்றும் புதிய அரசாங்கத்திற்கான வாய்ப்புகளை வலியுறுத்துதல், ஐ நா அமைதிகாக்கும் பணிகளில் பல்திறன் கொண்ட / சிறப்பு நடவடிக்கைப் படைகளை (SOF) பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு (C2) திறன்களை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள அனர்த்த முகாமைத்துவ அமைப்பை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மதிப்பாய்வு செய்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) போன்ற தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும், தேசிய அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை அதிகரிப்பதை வலியுறுத்தி இலங்கைக்கும் ஐ நா சபைக்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை பதில் பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.