மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு

ஜனவரி 16, 2025

நாட்டில் நிலவும் மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) பாதுகாப்பு அமைச்சில் சிரேஷ்ட சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

மனித-யானை மோதல்கள் உள்ள பகுதிகளில் யானை வேலிகளைப் பராமரிப்பதிலும், மக்களையும் யானைகளையும் பாதுகாக்க வனவிலங்குத் துறைக்கு உதவி வழங்குவதிலும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசிய யானை இலங்கையில் ஒரு பாதுகாக்கப்பட்ட விலங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூழல் மற்றும் சமூக-பொருளாதார துறைகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ள மனித-யானை மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கலந்துரையாடலின் போது மனித-யானை மோதலுக்கு புதிய முறையிலான தீர்வுகளை காண சிவில் பாதுகாப்புத் திணைக்களம் எவ்வகையில் பங்களிக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக பனிப்பாளர் நாயகம் , ரியர் அட்மிரல் W.B.D.E.M சுதர்ஷன மற்றும்  பணிப்பாளர் - செயல்பாட்டு பிரிகேடியர் M S வெலிகம உட்பட பல சிரேஷ்ட  அதிகாரிகள் இக்கலந்துரையாடலில்  கலந்துக் கொண்டனர்.