அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கை உயர்மட்ட பாதுகாப்பு தலைமைகளை சந்தித்தனர்
ஜனவரி 16, 2025அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) உயர்மட்டக் தூத்துக்குழு, பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது. இச்சந்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு அமைப்பான ISG, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை கடலோர பாதுகாப்புபடை, தேசிய பாதுகாப்பு கல்லூரி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியைச் சேர்ந்த பணியாளர்களுடன் இணைந்து நடத்தி வரும் நிறுவன திறன் மேம்பாட்டு திட்டங்களை மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிராந்திய திட்டத் தலைவர் (இந்தோ-பசிபிக் பிராந்தியம்) மைக்கேல் ரெம்போல்ட் தலைமையிலான இத்துத்துக்குழுவில் இலங்கையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் (CPC) மெட் ஆஷ்லி , துணை CPC, டேனியல் சிம்சன், பாதுகாப்பு அமைச்சக முயற்சிகளுக்கான பொருள் நிபுணர் மற்றும் குழுத் தலைவர் ஆஸ்கார் டி சோட்டோ, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் டோனி நெல்சன் மற்றும் தூதரகத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரி கமாண்டர் சோன் லின் ஆகியோரும் அடங்கினர்.
இந்த கலந்துரையாடல்கள் ISG மற்றும் இலங்கைகிடையிலான கூட்டு முயற்சிகளை அடிக்கோடிட்டுக்காட்டுவதாக அமைவதுடன், பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதாகவும் அமைந்தன. இது இலங்கையின் பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியதுடன், இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கூட்டுமுற்சிகளை வளர்ப்பதற்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுக்கிறது.
இக்கலந்துரையாடலில் போது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வலியுறுத்தும் எதிர்கால கூட்டு முயற்சிகளில் ஆர்வம் குறித்தும் பேசப்பட்டன. பாதுகாப்புத் துறையில் பரஸ்பர வளர்ச்சி மற்றும் புரிதலை வளர்ப்பதில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையை இந்தக் கூட்டங்கள் அடிக்கோடிட்டுக் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.