பாதுகாப்பு அமைச்சசு பொது தினத்தில் போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு
ஜனவரி 20, 2025பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் ஜனவரி 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தினத்தின் போது பாதுகாப்பு அமைச்சு போர் வீரர்கள் மற்றும் உயிநீத்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும், ஓய்வு பெற்ற, ஊனமுற்ற வீரர்கள் மற்றும் உயிர் நீத்த போர்வீர்ர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளித்தது.
இந்நிகழ்வின் போது, பங்கேற்பாளர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும், அதனுடன் தொடர்புடைய நலன்புரி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யவும் பாதுகாப்பு செயலாளர் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாகவும் அவர்களின் சேவை மற்றும் தியாகங்களுக்கு நாட்டின் நன்றியை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.