CResMPA திட்டம் குறித்து கலந்துரையாட உலக வங்கி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
ஜனவரி 21, 2025உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (ஜனவரி 20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.
இலங்கையில் காலநிலை மீள்தன்மை பல கட்ட திட்ட அணுகுமுறை (CResMPA) திட்டம் தொடர்பில் உள்ள சவால்களை எதிர்கொள்வது மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்திகளைப் பற்றி, குறிப்பாக நீண்டகால திட்ட மேலாண்மை சவால்களை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடுடப்பட்டது.
இச்சந்திப்பின் போது CResMPA திட்டத்தை செயல்படுத்தும் போது எதிர்கொள்லப்படும் சவால்கள் மற்றும் தடைகள் பற்றிய பொதுவான விளக்கமொன்றை உலக வாங்கி பிரதிநிதிகள் குழு வழங்கியது. மேலும், இந்த சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் கருத்தில் கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்மொழிந்தனர்.
இந்த சந்திப்பு CResMPA திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நிலையை குறிக்கிறது, இதன் மூலம் காலநிலை மாற்ற சவால்களை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.