DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை
மரியாதையை நிமித்தம் சந்தித்தார்
ஜனவரி 22, 2025
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் HHKSS ஹேவகே, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 22)சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளருக்கு DSCSC இன் தற்போதைய பாடத்திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். கல்லூரியின் சேவைகளை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் சிறந்த எதிர்கால முப்படை அதிகாரிகளை உருவாக்குவதற்கு சர்வதேச தரத்தினாலான பயிற்சிகளை அளிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.