CSD ற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனவரி 23, 2025

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் KHP பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு), இன்று (ஜனவரி 23) தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

 இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடமிருந்து மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.