இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் 76வது இந்திய குடியரசு தின விழா நடத்தப்பட்டது
ஜனவரி 27, 2025இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொழும்பு Indian Houseல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.
பிரதமர் கௌரவ (Dr.) ஹரிணி அமரசூரிய, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இதில் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக அமைந்தது.
இதன் போது நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் இரு நாடுகளும் இடையேயான கலாச்சார ஒற்றுமையைக் மற்றும் மரபுகளின் பன்முகத்தன்மை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
பதில் இந்திய உயர்ஸ்தானிகர் Dr. சத்யஞ்சல் பாண்டே சிறப்பு விருந்தினர்களை வரவேற்றதுடன், தனது உரையில், பல தசாப்தங்களாக இந்தியாவையும் இலங்கையையும் ஒன்றிணைத்த பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சார பிணைப்புகளை எடுத்துரைத்தார். இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தனும் இந்நிதிகழ்வில் கலந்து கொண்டார்.