விமானப்படைத் தளபதி பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
ஜனவரி 28, 2025ஒய்வு பெரும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, திங்கட்கிழமை (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது நிகழ்ந்த கலந்துரையாடலில், எயார் மார்ஷல் ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை விமானப்படை அடைந்த முக்கிய மைல்கற்கள் மற்றும் சாதனைகளைப் பற்றியம், இலங்கை விமானப்படையின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கள் குறித்தும் கலந்துரையாடபட்டது.
தனது பதவிக் காலத்தில் தனக்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எயார் மார்ஷல் ராஜபக்ஷ பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர, இலங்கை விமானப்படையின் வளர்ச்சிக்கும் தேசிய பாதுகாப்புக்கான அவரது அர்ப்பணிப்புக்கு ஓய்வு பெறும் எயார் மார்ஷல் ராஜபக்ஷவை பாராட்டினார்.