கொழும்பில் அவுஸ்திரேலிய தின நிகழ்ச்சி நடைபெற்றது

ஜனவரி 28, 2025

ஜனவரி 26 ஆம் திகதி நிகழும் அவுஸ்திரேலிய தினத்தைக் முன்னிட்டு கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (ஜனவரி 27) அவுஸ்திரேலிய தின நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ Dr.நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை உயர் ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீவன்ஸ் வரவேற்றார். இந்நிகழ்வில் உரையாற்றிய, உயர் ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கொண்டனர்.