இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனவரி 28, 2025

இலங்கை விமானப்படையின் (SLAF) புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, WWV, RWP, RSP மற்றும் மூன்று பார்கள், USP, Fndu (சீனா), psc, qhi அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமநாயக்க நேற்று (ஜனவரி 27) ஜனாதிபதி செயலகத்தில் அவரின் நியமனக் கடிதத்தை கையளித்தார்,

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் பயின்ற எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க 1991 ஆம் ஆண்டு 24வது ஆட்சேர்ப்பின் மூலம் இலங்கை விமானப்படையில் கெடட் அதிகாரியாக சேர்ந்தார், 1993 ஆம் ஆண்டு பொது கடமைகள் பைலட் கிளையில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது ஆரம்ப பயிற்சி SF 260 Warrior விமானத்தில் பெற்றார். அதன் பிறகு அவர் விமானப்படை போக்குவரத்துப் பிரிவில் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றார்.

பின்னர் அவர் rotary-wing நடவடிக்கைகளுக்கு மாறினார், 1993 இல் பெல் 206, பெல் 212 மற்றும் பெல் 412 ஹெலிகாப்டர்களில் பயிற்சியை முடித்தார். பின்னர் பெல் 212 பயன்பாட்டு ஹெலிகாப்டர் படைக்கு நியமிக்கப்பட்டதுடன் அவரின் திறமையான சேவையின் விளைவாக captain பதவியையம் பெற்றுக்கொண்டார்.

1998 ஆம் ஆண்டு, எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க ஹிங்குராக்கொடை விமானப்படை தளத்தில் பயிற்றுவிப்பு பயிற்சியை நிறைவு செய்தார். ராயல் விமானப்படையின் மத்திய பறக்கும் கல்லூரியில் சான்றளிக்கப்பட்ட A2 தரப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் பயிற்றுவிப்பாளரம் ஆவார். 7,000 மைநித்தியாலத்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர் பறக்கும் அனுபவத்தினைக் கொண்ட, அவர் ஒரு தகுதிவாய்ந்த கருவி மதிப்பீட்டு ஆய்வாளராகவும், Night Vision Goggle (NVG) ஹெலிகாப்டர் செயல்பாடுகளில் நிபுணரம் ஆவார்.

அலபாமாவில் உள்ள அமெரிக்க விமானப்படையின் வான்படை பல்கலைக்கழகத்தில் பணியாளர் படிப்பில் பட்டம் பெறுள்ளதுடன், சீனா தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் "ndc" பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.

எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார், அவற்றில் கட்டளை அதிகாரி, வான் படைகள் பயிற்சி மற்றும் செயல்பாடுகள் பதவியும் அடங்கும்.